உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 5, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

கல்முனையில் வீடு முற்றாகத் தீக்கிரை: தீயணைப்புப் பிரிவின் தயார்நிலை குறித்து மக்கள் சரமாரிக் கேள்வி.!!!

கல்முனை, தைக்கா வீதியில் உள்ள வீடொன்றில் மின்சாரக் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் அவசரகாலச் செயற்பாடுகள் மற்றும் தயார்நிலை குறித்து அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (04) மாலை இடம்பெற்ற இத்தீ விபத்தைத் தொடர்ந்து, கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளன.

எனினும், ஒரு தீயணைப்பு வாகனத்திலிருந்து மற்றைய வாகனத்திற்கு நீரை நிரப்பும் நடவடிக்கை தாமதமாக முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே தீயணைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தீயணைப்பு வாகனங்களில் நீர் நிரப்பப்பட்டு அவை முழுமையாகச் செயற்பாட்டுக்குத் தயாராகும் முன்னரே குறித்த வீடு முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அப்பகுதி மக்கள், அவசரகாலச் சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய அவசர சேவையில் நீர் பற்றாக்குறை மற்றும் செயற்பாட்டுத் தாமதங்கள் ஏற்படுவது பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் வாகனங்கள், நீர் வசதிகள் மற்றும் அவசரகாலச் செயற்பாட்டுத் தயார்நிலை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1294633

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time