உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: வெளிநாடு செல்ல அனுமதி கோரிய கோட்டாபய ராஜபக்ஷ; தீர்ப்பு நவம்பர் 25ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு !!!

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் கீழ் தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கோரிக்கைக்கு அமைய, கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதய அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து மேலதிக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளதால், வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கி அனுமதி வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இதற்கு முன்னர், கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயண அனுமதிக்கான கோரிக்கையில் திகதி தொடர்பான முரண்பாடு காணப்பட்டதால் அது நிராகரிக்கப்பட்டிருந்தது.

அன்றைய விசாரணையின்போது, கோட்டாபய ராஜபக்ஷ இதுவரை குறித்த விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை என சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயண அனுமதி கோரும் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதி வழங்கப்படுமா என்பது தொடர்பான இறுதி முடிவு நவம்பர் 25ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

இதுவரை வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292748

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time