2026 இறுதி காலாண்டில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு இல்லை: தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவிப்பு.!!!
இலங்கையில் 2026ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்காக முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று (05) நடைபெற்ற பங்குதாரர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் நீர்த்தேக்கங்களில் தற்போது காணப்படும் நீர்மட்டம் மற்றும் எல் நினோ (El Niño) காலநிலை நிலைமைகளின் கீழ் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவிலான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளமை ஆகிய காரணிகளைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், குறித்த காலப்பகுதியில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு இன்றி தற்போதைய கட்டண முறைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.