உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 5, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

இலங்கையில் 208 பொலிஸ் அதிகாரிகள் கைது: சுமார் 1,500 பேர் பணியிலிருந்து இடைநிறுத்தம்.!!!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இதுவரை 208 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் ஒழுக்காற்று முறைகேடுகள் தொடர்பில் சுமார் 1,500 பொலிஸ் அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்திற்குள் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் இருப்பதை மறுக்க முடியாது எனத் தெரிவித்த அவர், அவ்வாறான அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பதற்கு, தவறிழைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரிகளே சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவது நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு பாரிய சவாலாக அமையும் என்பதால், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அதிகாரிகள் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1295534

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time