உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 5, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

கத்தாரில் மழை வேண்டி இஸ்திஸ்கா தொழுகை: அமீர் ஷேக் தமீம் உள்ளிட்ட பெருந்திரளானோர் பங்கேற்பு.!!!

கத்தார் நாட்டில் மழை வேண்டி இன்று (05) லுசைல் தொழுகை மைதானத்தில் நடைபெற்ற விசேட இஸ்திஸ்கா தொழுகையில், அந்நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி நடைபெற்ற இந்தத் தொழுகையில், கத்தார் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் மழையை அருளுமாறு எல்லாம் வல்ல இறைவனிடம் விசேடமாகப் பிரார்த்திக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஷூரா கவுன்சில் தலைவர் ஹசன் பின் அப்துல்லா அல்-கானிம், பல்வேறு ஷேக்குகள், அமைச்சர்கள், ஷூரா கவுன்சில் உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்ற உரையில், ஷேக் டாக்டர் யஹ்யா புட்டி அல்-நுஐமி, இறைவனிடம் பணிவுடனும் மரியாதையுடனும் பிரார்த்தனை செய்யுமாறு அங்கு கூடியிருந்த மக்களைக் கேட்டுக்கொண்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1295553

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time