உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 18, 2026

Hot News

IMG-20260517-WA0018
சமூக வளர்ச்சியின் அடித்தளம்: கல்வியிலா அல்லது அபிவிருத்தியிலா நிலைத்திருக்கும்???
IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!

Share :

பல சபைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்க; தமிழ் பேசும் கட்சிகளோடு முதலில் பேசி வருகிறோம் – ரிசாத் பதியுதீன்.!!!

பல சபைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்க முதலில் தமிழ் பேசும் கட்சிகளுடன் கட்சியின் தலைமைத்துவ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

கிண்ணியா பெரியாற்று முனை நகர சபைக்கு சொந்தமான கட்டிடத்தில் இன்று (12) இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களாக வெற்றியீட்டியவர்களுடனான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர், பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மது மற்றும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சில சபைகளில் பிரதி தவிசாளர்களை பெறுவதற்கும் சில சபைகளில் ஆட்சியின் பங்காளர்களாக இருப்பதற்கும் செயற்பட்டு வருகிறோம். குறிப்பாக வடகிழக்கு மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் உள்ள வாக்களித்த மக்களுக்காக எமது கட்சி சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் அதேபோல கட்சியினுடைய வேட்பாளர்கள் அரும்பாடுபட்டு தங்களுக்காகவும் கட்சிக்காகவும் ஒன்றுபட்டு வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்.

அதிக பட்ச ஆதரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அது திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவாக இருக்கலாம். இதில் ஆட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம்.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நல்ல சபைகளை உருவாக்கி அதன் மூலம் பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் உச்ச பயனை பெற்றுக் கொடுப்போம் என்று கூறியதுடன் எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்துக்கான மாவட்ட தலைமைத்துவம் மற்றும் மத்திய குழு உள்ளிட்டவற்றை உயர்பீட ஒன்று கூடலின் பின்பு முடிவுகளை எடுப்போம் இம்முறை திருகோணமலை மாவட்டத்திற்கு உள்ளூராட்சித் தேர்தல் நல்லதொரு முடிவுகளை பெற்று மாற்றம் கண்டுள்ளது. இதற்காக கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் உள்ளிட்டவர்கள், உழைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன் என்றார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 822261

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time