அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்.!!!
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் இன்று (18) முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் டி.எம்.எஸ். பசிது சில்வா மற்றும் சங்கத்தின் உதவிச் செயலாளர் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அவசியமான பட்சத்தில், அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்படுவதுடன், சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.