ஓமானில் கைது செய்யப்பட்ட சமிட்புர சது; நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.!!!
ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று (18) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘சமிட்புர சது’ என அழைக்கப்படும் கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா, மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு 15, முகத்துவாரம், சமிட்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதான திமுது சதுரங்க பெரேரா, 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஓமானுக்குத் தப்பிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர்களில் ஒருவரான இவர், இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அத்தியாவசியமாகத் தேடப்பட்டு வந்த நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள அவரிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

