முன்னாள் அமைச்சர் அகில விராஜ் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுவிப்பு; வெளிநாடு செல்லத் தடை.!!!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, இரு சந்தேகநபர்களும் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இரு சந்தேகநபர்களும் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.