உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல கைது: இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை.!!!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டசாலை தொல்பொருள் பகுதியில் இருந்ததாகக் கூறப்படும் ‘சந்திரவட்ட’ கல் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் அடிப்படையிலும், மற்றுமொரு குற்றச்சாட்டின் அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் (SLRC) அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு மேலதிகமாக ஆறு பணியாளர்களை இணைத்துக்கொண்டமை மற்றும் அவர்களை தனிப்பட்ட ஊழியர்களாகப் பணியில் அமர்த்தி, அவர்களுக்கான கொடுப்பனவுகளை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊடாக வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1070453

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time