கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்.!!!
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத் குமார லியனகே, நேற்று (17) மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, கொழும்பிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பத் குமார லியனகே கிழக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


