வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் 197 ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்.!!!
2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைய, வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றிய 197 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் நேற்று (17) வழங்கப்பட்டன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டொக்டர் அசிரி கரவர்தன தலைமையில், அமைச்சின் 9ஆவது மாடியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இந்த நியமன நிகழ்வு நடைபெற்றது.
நிரந்தர வேலைவாய்ப்பு உறுதியின்றி நீண்டகாலமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்த ஊழியர்கள், இந்த புதிய நியமனத்தின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிரந்தர ஊழியர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம், பிரதி பணிப்பாளர் நாயகர்கள், மாகாண பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


