வீட்டு முற்றத்தில் சக்திவாய்ந்த 81 ரக மோட்டார் குண்டு மீட்பு – காத்தான்குடி பொலிசார் தீவிர விசாரணை.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் இன்று மதியம் (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில் வீடொன்றின் முற்றத்தில் வீட்டு உரிமையாளர் பயிர்ச் செய்கைக்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது சக்தி வாய்ந்த 81ரக மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளர் காத்தான்குடி பொலிசாருக்கு குறித்த குண்டு தொடர்பாக அறிவித்ததையடுத்து ஸ்தலத்துக்கு வந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்
விடுதலைப் புலிகளின் காலத்தில் இக்குண்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
