இஸ்லாமாபாத் வைத்தியசாலையில் கோர தீ விபத்து; 15 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி.!!!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழகத்தின் (PIMS) வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் புதிதாகப் பிறந்த 15 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் பொருத்தப்பட்டிருந்த ஏர் கண்டிஷனர் (AC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்தப் பிரிவில் 16 புதிதாகப் பிறந்த குழந்தைகள் இருந்ததாகவும், அவர்களில் ஒரு குழந்தை மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், வைத்தியசாலைப் பகுதியில் பரவியுள்ள புகையை முழுமையாக அகற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




