உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

11 நாடுகளின் பிரதிநிதிகள் கொழும்பில்; ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வ நற்சான்றிதழ் கையளிப்பு.!!!

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 வெளிநாட்டு தூதுவர்களும் 4 உயர்ஸ்தானிகர்களும் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.

இந்நிகழ்வில், இலங்கைக்கான புதிய இராஜதந்திரிகள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் சார்பில் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.

அதன்படி, பிரேசில், பங்களாதேஷ், சீனா, ஆஸ்திரியா, அமெரிக்கா, டொமினிக்கன் குடியரசு, கானா, புரூணை தாருஸ்ஸலாம், சூடான், கயானா மற்றும் பனாமா ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் இலங்கைக்கான தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.

நற்சான்றிதழ் கையளிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய இராஜதந்திரிகளுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1231750

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time