வனவிலங்கு அதிகாரிகளுக்கு புதிய மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு.!!!
இயற்கை சூழல் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 13 அதிகாரிகளுக்கு புதிய மோட்டார் சைக்கிள்கள் நேற்று (25) வழங்கி வைக்கப்பட்டன.
திருகோணமலை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வனஜீவராசிகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய மோட்டார் சைக்கிள்களை அதிகாரிகளிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, மாவட்ட அரசாங்க அதிபர் W. H. M. ஹேமந்தகுமார, அமைச்சின் மேலதிக செயலாளர் D.C.P. உதய குமார, திணைக்கள பணிப்பாளர் U.L. தௌஃபீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் சவாலான பணிகளை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்கு இந்த புதிய மோட்டார் சைக்கிள்கள் பெரும் உதவியாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், “இன்றைய நாள் நமது திணைக்களத்திற்கும் வனவிலங்கு பாதுகாப்புத் துறைக்கும் மிகவும் விசேடமானதும் மகிழ்ச்சிகரமானதுமான நாளாகும்” என அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.








