உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 6, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

காரைதீவில் அதிகாலை பாரிய மின்னல் தாக்கம்: பாதுகாப்பு உத்தியோகத்தரின் வீடு பலத்த சேதம்.!!!

-வி.ரி. சகாதேவராஜா-

காரைதீவில் இன்று (06) வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பாரிய மின்னல் தாக்கத்தினால் தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் வீடு பலத்த சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் அதிகாலை சுமார் 5 மணியளவில் காரைதீவு விபுலானந்த வீதியில் இடம்பெற்றுள்ளது.

தனியார் வங்கி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றும் கணபதிப்பிள்ளை தங்கநேசன் என்பவரின் வீட்டின் அன்டனா மீது மின்னல் தாக்கியதில், வீட்டின் மின்சுற்றுக் கட்டமைப்பு, மின் உபகரணங்கள் மற்றும் கட்டிடத்தின் பல பகுதிகள் பாரிய சேதங்களுக்குள்ளாகியுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற வேளையில், வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அதிகாலை மழை பெய்துகொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட பாரிய இடி, மின்னலைத் தொடர்ந்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்கத்தைத் தொடர்ந்து வீட்டினுள் இருள் சூழ்ந்ததால், குடும்பத்தினரால் உடனடியாக வெளியேற முடியாமல் சுமார் ஒரு மணித்தியாலம் அச்சத்துடன் வீட்டினுள் இருந்துள்ளனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் கதறி அழுததாகவும், அயலவர்கள் விரைந்து வந்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக கிராம சேவை உத்தியோகத்தர், பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகாலை வேளையில் இடம்பெற்ற இந்த மின்னல் தாக்கத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1296984

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time