பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் பாலமுனை நடுவோடையில் 2,000 பனை விதைகள் நடும் திட்டம் முன்னெடுப்பு.!!!
-அஜ்மல்கான்-
மட்டக்களப்பு, பாலமுனை நடுவோடை கடற்கரையோரப் பகுதியில் 2,000 பனை மரக் கன்றுகளை நடும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (06) நடைபெற்றது.
பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், குறித்த கடற்கரையோரப் பகுதியில் 2,000 பனை மரக் கன்றுகளை நடுவதற்கான ஆரம்பகட்ட விதை நடுகை நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பனை விதைகளை நாட்டும் பணியில் பங்கேற்றனர்.
கடற்கரையோரப் பகுதிகளில் பனை வளத்தை அதிகரித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் பனை சார்ந்த தொழில்துறையின் வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.









