ஜோர்தானில் இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக கத்திக்குத்துத் தாக்குதல்: பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு.!!!
ஜோர்தானில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட கூர்மையான ஆயுதத் தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தாக்குதலின்போது தூதரகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ஜோர்தான் அதிகாரிகள், குறித்த தாக்குதல் ஒரு பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.



