உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 6, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

50 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் பறிமுதல்: காத்தான்குடி பாலமுனையில் இருவர் கைது.!!!

காத்தான்குடி, பாலமுனை பகுதியில் வாகனம் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சட்டவிரோத சுருக்கு வலைகளுடன் இருவர் வியாழக்கிழமை (05) அதிகாலை கைது செய்யப்பட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் வழிகாட்டலில், மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, சம்பவதினமான அதிகாலை 4.00 மணியளவில் பாலமுனை கடற்கரைக்குச் செல்லும் வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார், கடற்கரையை நோக்கிப் பயணித்த மூடப்பட்ட சிறிய ரக வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த வாகனத்தில் சட்டவிரோத சுருக்கு வலைகள் கொண்டு செல்லப்படுவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வாகனத்தின் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சுருக்கு வலைகளும், அவற்றைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் விசனம்:

இதேவேளை, மட்டக்களப்பு கடற்பரப்பில் சட்டவிரோத சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் முன்னாள் மீனவ சங்கங்களும் மீனவர்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் குறித்த திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கையளித்திருந்தனர்.

எனினும், சட்டவிரோத சுருக்கு வலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு திணைக்கள அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் அசமந்தப் போக்கில் செயற்படுவதாக மீனவர்கள் கடும் அதிருப்தியையும் விசனத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1296953

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time