உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 பேர் உயிரிழப்பு; 46 பேர் காயம்.!!!

• நாக்சு நகரின் பாக்கென் மாவட்டத்தில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – உயிரிழப்புகளும் பெரும் பாதிப்புகளும் பதிவு.

சீனாவின் சிசாங் (Xizang) பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 46 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசாங் பிராந்தியத்தின் நாக்சு (Nagqu) நகரிலுள்ள பாக்கென் (Baqen) மாவட்டத்தில் 7.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று (22) இரவு 10.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, நாக்சு நகருக்கு கிழக்கு–வடகிழக்குத் திசையில் சுமார் 191 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்தது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1254394

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time