உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் 9.9 இலட்சத்தை கடந்தது – இந்தியா முதலிடத்தில்.!!!

இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9 இலட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகார சபை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் மே 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 990,032 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பிய நாடாக இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன், இந்தியாவிலிருந்து மட்டும் 236,916 பேர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கணிசமான அளவில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில், மே மாதம் முதலாம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 113,755 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் வெளிநாட்டு செலாவணி இருப்பை அதிகரிப்பதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 931334

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time