மின்னேரியா – ஹபரணை வீதியில் கோர விபத்து: பொலன்னறுவை வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் உயிரிழப்பு.!!!
மின்னேரியாவிலிருந்து ஹபரணை நோக்கிப் பயணித்த கார் மீது எதிரே வந்த டிப்பர் ரக லொறி நேருக்கு நேர் மோதியதில், பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த கோர விபத்து நேற்று (06) மாலை மின்னேரியா – ஹபரணை வீதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த சத்திரசிகிச்சை நிபுணரான வைத்தியர் ரோஹண கமகே, உடனடியாக ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் டிப்பர் லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சாரதி இன்று (07) ஹிங்குராக்கொட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் இவ்வாறு விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
