உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 6, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

அரச சேவைகள் இனி மக்களின் வீடுகளுக்கே: டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுக்கும் இலங்கை.!!!

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி தேசிய கண்காட்சியான ‘INFOTEL 2026’ இன்று (06) கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தலைமையில் கண்காட்சி ஆரம்பமானது.

‘டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல்’ (Fuelling the Digital Economy) என்ற தொனிப்பொருளில் இம்முறை நடைபெறும் இக்கண்காட்சி, இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர், 1992ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலாக INFOTEL கண்காட்சி நடத்தப்பட்டபோது நாட்டில் இணைய இணைப்பு வசதிகள் கூட இல்லாத நிலை காணப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அன்றைய காலகட்டத்தில் கணினிகளைப் பார்ப்பதற்காக மக்கள் கண்காட்சிக்கு வந்த நிலையில், இன்று ஸ்மார்ட்போன்கள் ஊடாகப் பல்வேறு சேவைகளை விரல் நுனியில் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு நாடு தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், தொழில்நுட்ப வசதிகள் இருப்பது மாத்திரம் போதுமானதல்ல எனத் தெரிவித்த அவர், அந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் எவ்வாறு பயனளிக்க முடியும் என்பதே முக்கியமான கேள்வியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு வரிசையும் சம்பந்தப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பின் தோல்வியை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இந்த நோக்கில், ‘GovPay’ டிஜிட்டல் கொடுப்பனவு தளத்தின் ஊடாக கடந்த ஒரு வருடத்தில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதுடன், 7 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை சம்பவ இடத்திலேயே டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் இணையவழியாக அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் LankaQR திட்டங்களை ஊக்குவிப்பதன் மூலம் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் தமது டிஜிட்டல் வர்த்தகப் பரிவர்த்தனைப் பதிவுகளைப் பயன்படுத்தி நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

இது நாட்டின் பணப் பரிவர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, தகவல் தொழில்நுட்பத் தொழில்துறை கூட்டமைப்பின் (FITIS) தலைவர் கலாநிதி தயான் ராஜபக்ஷ, சிரேஷ்ட துணைத் தலைவர் சன்ன டி சில்வா, INFOTEL துணைத் தலைவர் தாரிக் சனூன், FITIS முன்னாள் தலைவர் இந்திக டி சொய்சா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகப் பங்காளர்கள் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1298266

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time