உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 7, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

போலந்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை: கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாரம்பரிய நடனத்துடன் வரவேற்பு.!!!

போலந்திலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகள், இன்று (06) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்கப்பட்டனர்.

போலந்திலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த என்டர் ஏர் (Enter Air) விமானங்கள் மூலம் இலங்கை வந்தடைந்த பயணிகளுக்கு, இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் ஏற்பாட்டில் வண்ணமயமான பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்வு, இலங்கையின் பாரம்பரிய கலாசாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்ததுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையை மகிழ்ச்சிகரமாக மாற்றியது.

இவ்வருகையானது இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான சுற்றுலாத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, ஆஸ்ட்ரோ நோவா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் இலங்கையில் என்டர் ஏர் விமான சேவையின் பொதுவிற்பனை முகவராக (GSA) செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1300319

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time