கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் திடீர் வெள்ளம்: 15 நிமிட கனமழைக்கே வர்த்தக நிலையங்கள் நீரில் மூழ்கின.!!!
கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதிகளில் இன்று (06) மாலை பெய்த கடும் மழை காரணமாகப் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 15 நிமிடங்கள் மாத்திரம் நீடித்ததாகக் கூறப்படும் இந்தத் திடீர் கனமழையினால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மத்திய கொழும்பில் அமைந்துள்ள பீப்பிள்ஸ் பார்க் (People’s Park) கட்டிடத் தொகுதிக்குள் மழைநீர் புகுந்ததால், அங்குள்ள பல வர்த்தக நிலையங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறுகிய நேரத்தில் பெய்த அதிகளவான மழையினால் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே, வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்
