இரத்மலானை விமான நிலையம் அருகே பயிற்சி விமானம் விபத்து.!!!
இரத்மலானை விமான நிலையத்திற்கு அருகில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த “செஸ்னா 152” (Cessna 152) ரக இலகு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பயிற்சி விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரத்மலானை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



