உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

காத்தான்குடி வாவியில்: அடையாளம் தெரியாத ஆணின் உடலம் மீட்பு.!!!

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள குவைத் சிட்டி பின் ஆற்று வாவியில் இருந்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (13) இரவு மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. தகவலறிந்த பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் குறித்த நபரின் சடலம் வாவியிலிருந்து மீட்கப்பட்டது.

பின்னர் சடலம் மேலதிக பரிசோதனைகள் மற்றும் உடற்கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929808

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time