உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஏறாவூர் பகுதியில் கைக்குண்டு மீட்பு: பொலிஸார் விசாரணை.!!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐயங்கேணி பகுதியில் நீர் தேங்கியிருந்த இடமொன்றிலிருந்து பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்று நேற்று (13) புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து, ஏறாவூர் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, நீர் தேங்கியிருந்த இடத்தில் பழுதடைந்த நிலையில் கைக்குண்டு ஒன்று காணப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மீட்கப்பட்ட கைக்குண்டை பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்வதற்காக வவுணதீவு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பின்னர் குறித்த குண்டை பாதுகாப்பான முறையில் வெடிக்க வைத்து செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066786

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time