உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!
IMG-20260906-WA0028
சீருடை மாறுகிறது; காவல்துறையும் மாறுமா?

Share :

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க ட்ரோன் இலக்கு; வீழ்த்தியதாக ஈரான் தகவல்.!!!

ஹோர்முஸ் நீரிணைக்கு மேலாக பறந்த அமெரிக்காவின் MQ-1 ஆளில்லா விமானத்தை இடைமறித்து அழித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது.

IRGC வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈரானின் விண்வெளிப் படையினால் இயக்கப்படும் புதிய வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் குறித்த ட்ரோன் கண்காணிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்கா முன்னர் பயன்பாட்டிலிருந்து நீக்கியிருந்த MQ-1 ரக ட்ரோன்களை மீண்டும் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், மேம்பட்ட MQ-9 ரக ட்ரோன்கள் பல அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் IRGC தனது அறிக்கையில் கூறியுள்ளது.

எனினும், MQ-9 ட்ரோன்கள் பெருமளவில் அழிக்கப்பட்டதால் MQ-1 ட்ரோன்களை அமெரிக்கா மீண்டும் சேவையில் ஈடுபடுத்தியதாகும் கூற்று ஈரானின் தரப்பிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அமெரிக்க விமானப்படை அதிகாரப்பூர்வ தகவலின்படி, MQ-1 Predator ட்ரோன் 2018 மார்ச் 9ஆம் திகதி அமெரிக்க விமானப்படை பயன்பாட்டிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றது. அதன் பின்னர் MQ-9 Reaper ரக ட்ரோன்களை மையமாகக் கொண்ட பயன்பாட்டுக்கு விமானப்படை மாறியது.

குறிப்பு: MQ-1 ட்ரோன் வீழ்த்தப்பட்டதாக ஈரான் வெளியிட்டுள்ள தகவலே தற்போது வெளியாகியுள்ளது; சம்பவம் தொடர்பில் அமெரிக்க தரப்பின் உறுதிப்படுத்தல் இந்த செய்தி தயாரிக்கப்பட்ட நேரத்தில் கிடைக்கவில்லை.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1169981

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time