உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260824-WA0060
வயது வரம்பு மட்டும் தீர்வா? – முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொழிலைச் சுற்றிய புதிய விவாதம்.!!!
IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!

Share :

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் கைத்தொலைபேசி வெடித்து 19 வயது இளைஞன் உயிரிழப்பு.!!!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் கைத்தொலைபேசி வெடித்ததில் 19 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனையைச் சேர்ந்த கமலேஸ்வரன் சங்கீதன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (27.08.2026) பிற்பகல் சுமார் 5 மணியளவில் தனது வீட்டில் கைத்தொலைபேசியை மின்னேற்றத்தில் (சார்ஜ்) இணைத்திருந்த நிலையில், அதனை நெஞ்சில் வைத்துக்கொண்டு உறங்கியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது மின்சாரம் தடைப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் கைத்தொலைபேசி திடீரென வெடித்ததாகவும், இதில் இளைஞர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்திற்கான துல்லியமான காரணம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த துயரச் சம்பவம் வாழைச்சேனை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கைத்தொலைபேசிகளை மின்னேற்றத்தில் வைத்திருக்கும் போது அவற்றை உடலுக்கு அருகில் வைத்து உறங்குவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1105512

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time