உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 29, 2026

Hot News

IMG-20260824-WA0060
வயது வரம்பு மட்டும் தீர்வா? – முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொழிலைச் சுற்றிய புதிய விவாதம்.!!!
IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!

Share :

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சி ஆரம்பம்; குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.!!!

நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் வறட்சி நிலைமை ஆரம்பமாகி, குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

தொடர்ச்சியாக நிலவும் கடும் வெப்பம் மற்றும் மழையின்மை காரணமாக மாவட்டத்தின் பல நீர்நிலைகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவதுடன், நீரை வீண்விரயம் செய்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கடும் வெயில் காரணமாக தேவையற்ற நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்த்து, உடல் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதியளவு நீராகாரங்களை அருந்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் கடும் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும், அனைவரும் நீரை பொறுப்புடன் பயன்படுத்தி நீர் வீண்விரயத்தைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1104196

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time