உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 29, 2026

Hot News

IMG-20260824-WA0060
வயது வரம்பு மட்டும் தீர்வா? – முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொழிலைச் சுற்றிய புதிய விவாதம்.!!!
IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!

Share :

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு ஆகஸ்ட் 31 முதல் வங்கிக் கணக்கில்.!!!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், பயனாளிக் குடும்பங்களைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான 2026 ஆகஸ்ட் மாதக் கொடுப்பனவு எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் இக்கொடுப்பனவைப் பெறத் தகுதியுடையவர்களாவர்.

கொடுப்பனவு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பின்னர், பயனாளிகள் தங்களது அஸ்வெசும கொடுப்பனவைப் பெறும் அதே வங்கிக் கிளையில் ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கு விபரங்கள் சரியாகவும் புதுப்பிக்கப்பட்ட நிலையிலும் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அல்லது வங்கிக் கணக்கு விபரங்களைப் புதுப்பிக்க வேண்டியவர்கள், நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ 1924 உடனடி உதவித் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

அஸ்வெசும பயனாளிகள், தங்களுக்குரிய கொடுப்பனவு தொடர்பான தகவல்களை உரிய அதிகாரிகளிடமிருந்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1104552

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time