உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 13, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 20-வது ஆண்டு நிறைவு: மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டி பேரணி – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மனிதாபிமான உதவி.!!!​

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் ஹரிமா கழகத்தின் 20-வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, இன்று (12) ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான துவிச்சக்கர வண்டி பேரணியும் மனிதாபிமான உதவி வழங்கும் நிகழ்வும் மட்டக்களப்பில் இடம்பெற்றன.

மட்டக்களப்பு திருப்பெருந்துறை சந்தியிலுள்ள பாரதியார் சிலைக்கு முன்பாக காலை ஆரம்பிக்கப்பட்ட இத்துவிச்சக்கர வண்டி பேரணியானது, கல்லடி மணிக் கூட்டுக் கோபுரம் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் மட்டக்களப்பு காந்தி பூங்காவை வந்தடைந்தது. சமூக விழிப்புணர்வை மையப்படுத்தி நடத்தப்பட்ட இப்பேரணியில் திரளானோர் கலந்துகொண்டனர்.

கழகத் தலைவர் லயன்ஸ் எஸ். மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர் லயன்ஸ் சடாற்சரராஜா அவர்கள் திறம்பட ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

இந்நிகழ்வில் 306 D10 லயன்ஸ் கழகத்தின் ஆளுநர் லயன்ஸ் க. லொகேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். விசேட அதிதிகளாக துணை ஆளுநர்களான லயன்ஸ் ஹாகீர் அகமட், லயன்ஸ் ரீ. ஆதித்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கழகத்தின் 20 ஆண்டு கால சேவையை நினைவுகூரும் வகையில், மனிதாபிமான அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உலர் உணவுப் பொதிகள் காந்தி பூங்காவில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

லயன்ஸ் கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இந்த ஆண்டு நிறைவு விழாவினைச் சிறப்பித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 880105

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time