உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 12, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

காத்தான்குடி உழ்கிய்யா இறைச்சி விவகாரம்: பழுதடைந்த இறைச்சி குறித்து மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகம் விளக்கம்.!!!

உழ்கிய்யா இறைச்சி விடயம் நடந்தது என்ன.??? 

காத்தான்குடி – 01.மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் நம்பிக்கை பொறுப்பாளர்கள்

அனைத்து ஜமாஅத்தார்களுக்கும் பொதுமக்களுக்கும் கூட்டு உழ்கிய்யா இறைச்சி வழங்கல் தொடர்டபான தெளிவூட்டல்

காத்தான்குடி 01 மீரா பெரிய ஜும்ஆ பள்ளவாயலின் நம்பிக்கை பொறுப்பாளர் சபையினராகிய நாங்கள் 2026.06.11ம் திகதி இடம்பெற்ற பழுதடைந்த உழ்கிய்யா இறைச்சி தொடர்பில் தெளிவூட்டலானது

நாம் கடந்த 2025.10.15ம் திகதி முதல் 06 மாதங்களுக்கு (2026.04.15) வரை செயற்படும் வண்ணம் இப்பள்ளிவாயலுக்கு இடைக்கால நிர்வாக சபையாக 11 பேர் நியமிக்கப்பட்ட போதிலும் 09 பேர் மாத்திரமே கடிதத்தை பெற்று இப்பள்ளிவாயலின் நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தோம். இக்காலப்பகுதியில் இப்பள்ளிவாயலின் கடைகளுக்கான குத்தகை மற்றும் ஜமாஅத்தார் பதிவுகளை மீள் புதுப்பித்தல் என்பவற்றை செய்ததோடு, இந்நிர்வாகிகளில் சிலர் தாமாக விலகி கொண்டமையால் 06 பேர் மாத்திரமே பல சவால்களுக்கு மத்தியில் றமழான் கால விடயங்களையும் சிறப்பாக மேற்கொண்டிருந்தோம். கடந்த ஏப்ரல் 15ம் திகதியுடன் எமது இடைக்கால நிர்வாக காலப்பகுதி முடிவுற்ற போதும், நாங்கள் 06 பேரும் தொடர்ச்சியாக இயங்க முடியாது என அறிவித்தபோதிலும்  இம் மீரா பெரிய ஜும்ஆ பள்ளவாயலுக்கு முறையான நிர்வாகம் தெரிவு செய்வதில் இங்கு காணப்பட்ட ஒற்றுமையின்மை மற்றும் குழப்ப சூழ்நிலைகள் காரணமாக இப்பள்ளிவாயல் ஜமாஅத்தார்கள், ஊர் நலன்விரும்பிகள் ஊரிலுள்ள சமூக அமைப்புக்கள் என்பன எம்மிடம் கோரியதன் அடிப்படையில் இப்பள்ளிவாயலின் எதிர்கால நிலையினை கருத்திற் கொண்டே  ஹஜ்ஜுப் பெருநாள் வரை நாம் இயங்த தீர்மானித்தோம். ஆனாலும் திணைக்களத்தினால் நிர்வாக தெரிவு நடவடிக்கைகளினை முன்னெடுப்பதில் தாமத நிலை ஏற்பட்ட போது எம்மால் இங்கு தொடர்ச்சியாக செயற்பட முடியாது என தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தமையால் இப்பள்ளிவாயலுக்கான நிர்வாக தெரிவினை நடாத்துவதற்கு திணைக்களம் முன்வந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இவ்வாறான நிலையில் இவ்வருடம் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் புனித கடமையான உழ்கிய்யா கடமையினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக எமது நிர்வாகம் உழ்கிய்யாவிற்கான மாடுகளை அல்லது பங்குகளை தருமாறு நாமே பள்ளிவாயல் ஊடாக பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கியுருந்தோம். அதனடிப்படையில் எமக்கு கிடைக்கப்பெற்ற மாடுகள் மற்றும் பங்குகள் உட்பட ஒரு தன்னார்வ நிறுவனத்தினாலும் கிடைத்த உதவிகள் ஊடாக 21 மாடுகள் கிடைக்க்கப் பெற்றன. இது 1280 குடும்பங்களுக் பகிர்நதளிக்க ஏற்பாடு செய்ததோடு பங்குகள் தந்தவர்களுக்கும் சுமார் 100 கிலோ இறைச்சியினை வழங்குவதற்கும் நாமே நடவடிக்கை எடுத்திருந்தோம்.

இதனடிப்படையில் நாட்டில் மாடுகளை அறுப்பதற்கான சட்ட மட்டுப்பாடுகள் காணப்பட்டமையால் பெருநாள் தினம் மற்றும் அடுத்த நாட்கள் மாத்திரமே மாடு அறுக்க முடியும் என்பதால் அவ்விரண்டு நாட்களும் இரவு பகல் முழுவதும் எமது 06 நிர்வாக உறுப்பினர்களின் சொந்த, குடும்ப ஹஜ்ஜுப் பெருநாள் சந்தோசங்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்து மக்களுக்கு உரிய நேரத்திற்குள் இறைச்சியினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். இரவு 9.00 மணிக்கு கூட பள்ளிவாயலில் அறிவித்து இறைச்சியினை பெற்றுக் கொள்ளுமாறு கோரியிருந்தோம். இவ்வாறு சகல கஸ்டங்களையும் பொறுத்துக்கொண்டு  இம்மக்களுக்கு முழுமையாக அன்றைய தினமே இறைச்சியினை பொதி செய்து வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து சுமார் 1250க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி வழங்கப்பட்டது.

எந்தவொரு ஜமாஅத்தாருக்கும் சந்தா செலுத்தவில்லை என இறைச்சி வழங்குவது மறுக்கப்படவில்லை. இரண்டு தினங்களும் வருகை தந்த அனைத்து ஜமாஅத்தார்களுக்கும் இறைச்சி பொதி வழங்கப்பட்டது.

இரண்டு நாட்களும் சிலர் பெற்றுக்கொள்ளாமயால் அவர்களுக்கும் இவ் இறைச்சியினை வழங்க வேண்டும் என்ற நன்னோக்கின் அடிப்படையிலேயே சனிக்கிழமை ஞாயிற்று கிழமை மற்றும் திங்கட் கிழமை என்பன இறைச்சிகள் வழங்க கூடாது எனும் நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு இவ் இறைச்சி பொதிகளை குளிர்சாதானப் பெட்டியில் பாதுகாத்து வைத்திருந்தோம். செவ்வாய்கிழமை இறைச்சியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து, இறைச்சியினை பெற்றுக்கொள்ளாத ஜமாத்தார்களுக்கு, இறைச்சியினை பெற வருமாறு தொலைபேசி அழைப்பு கூட எம்மால் எடுக்கப்பட்ருந்தது. இவையெல்லாம் மக்களுக்கு இவ் இறைச்சியினை வழங்க வேண்டும் என்பதே எமது நிர்வாகத்தினதும் நோக்கமாகும்.

ஆனால் அன்றைய தினம் இறைச்சியினை எடுத்தபோது அது பழுதடைந்திருப்பதை நாம் அறிந்தோம். அதன்பின்னர் கலந்துரையாடலின் அடிப்படையில் திணைக்கள பொறுப்பானவர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு இப்பள்ளிவாயலுக்கு சொந்தமான வளவிற்குள்ளேயே முறையாக அகற்றுவதற்கு நடவடிக்கை அன்றைய தினமே மேற்கொள்ளப்பட்டது.

எனவே 1250 க்கு மேற்பட்ட ஜமாத்தார்களை முகமைத்துவம் செய்தவதற்காக நியமிக்கப்பட்டு தற்போது செயற்படும் 06 நிர்வாகிகளுமாகிய நாங்கள் மக்களுக்கு இவ் இறைச்சி பொதியினை வழங்க வேண்டும் என்பதற்காகவே சுமார் 06 நாட்கள் தொடர்ச்சியாக நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு செயற்பட்டோம். இவ்விடயங்களே இவ் உழ்கிய்யா இறைச்சி விடயத்தின் வெளிப்படையான உண்மையாகும் என்பதனை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றோம்.

ஆனால் எமது நிர்வாகத்தின் மீது கொண்டுள்ள காழ்புணர்வின் அடிப்படையிலும் தொடச்சியாக குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கிலும் முன்னெடுக்கப்படும் ஒரு சிலரது செயற்பாடகவே இது காணப்படுகின்றது. அல்லாஹ்வின் இல்லத்தை அவனுடைய திருப்பொருத்தத்தை மாத்திரம் பெற்றுக்கொள்வதற்காக பொறுப்பேற்ற நாம் பல அழுத்தங்களுக்கு மத்தியிலேயே இங்கு செயற்படுகிறோம் என்பதனை எல்லோரும் பொறுப்புடன் புரிந்து கொள்ளவேண்டும். நாம் எல்லாவற்றையும் அல்லாஹ்வுக்காக பொறுத்துக் கொள்கின்றோம்

இதுதொடர்பில் மேலதிக தகவல் தேவையாயின் எமது இடைக்கால நிர்வாக பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நம்பிக்கை பொறுப்பாளர்கள்
மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல்
காத்தான்குடி – 01.
2026.06.11.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 875662

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time