4.94 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 64 வயது தென் கொரியப் பிரஜை கட்டுநாயக்கவில் கைது.!!!
சுமார் 4 கோடியே 94 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 64 வயதுடைய தென் கொரியப் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (01) தனது பயணப் பொதியைப் பெற்றுக்கொள்வதற்காக வந்தபோதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த இரகசிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.