உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

ஆட்டோ விபத்தில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு – சாரதி கைது.!!!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஆட்டோ விபத்தில் சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று (18) சனிக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – காவத்தமுனை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

ஆட்டோவில் சிறுவன் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஆட்டோ சாரதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக உழவு இயந்திரத்தை கடந்து செல்லும் போது ஆட்டோவில் இருந்த சிறுவன் சிறிய உழவு இயந்திரத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் காவத்தமுனை பாடசாலை வீதியைச் சேர்ந்த றியாஸ் – மர்ழியா தம்பதிகளின் மகனான ஒன்பது வயதுடைய சஹ்ரான் என்பவரே மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த சிறுவனின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆட்டோ சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933302

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time