உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

பயணிகளின் உயிருக்கு ஆபத்தாக பஸ் செலுத்திய இரு சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை.!!!

பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கவனக்குறைவாகவும் அதிக வேகத்திலும் தனியார் பஸ்களை செலுத்தியதாகக் கூறப்படும் இரு சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இரண்டு தனியார் பஸ்கள், கினிகத்தேனை–ஹட்டன் பிரதான வீதியின் பேரகொல்ல பகுதியில் நேற்று (15) பிற்பகல் சுமார் 3 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளன.

முன்னால் பயணித்த பஸ்ஸை பின்னால் வந்த மற்றொரு பஸ் கவனக்குறைவாக முந்திச் செல்ல முற்பட்டபோது, அந்த பஸ் முன்னால் சென்ற பஸ்ஸின் பின்புறத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இரண்டு பஸ்களும் சேதமடைந்த போதிலும், அதில் பயணித்த எந்தவொரு பயணிக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தற்போது இடையிடையே கடும் மழை பெய்து வருவதால், வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுவதுடன், மண்சரிவு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

இந்நிலையில், குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் அவதானமாகவும் மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், விபத்துக்குள்ளான இரண்டு பஸ்களின் சாரதிகளும் கவனக்குறைவாகவும் பொறுப்பற்ற விதத்திலும் வாகனங்களை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இரண்டு பஸ்களும் பொலிஸ் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவற்றின் சாரதிகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1065686

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time