திருகோணமலை வைத்தியர்களின் சாதனை: 3.1 கிலோ எடையுள்ள பாரிய சிறுநீர்ப்பைக் கல் அகற்றல்.!!!
திருகோணமலை பொது வைத்தியசாலையில் 52 வயது நபருக்கு வெற்றிகரமான சத்திரசிகிச்சை
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் சிறுநீர்ப்பையில் இருந்து 3.1 கிலோகிராம் எடையுள்ள பாரிய சிறுநீர்ப்பைக் கல் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
குறித்த சத்திரசிகிச்சை கடந்த வெள்ளிக்கிழமை (14) சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருகோணமலைப் பகுதியில் வசிக்கும் 52 வயதுடைய நபருக்கே இந்த Vesicolithotomy எனப்படும் சிறுநீர்ப்பைக் கல் அகற்றும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவில் வைத்தியர்களான எம்.எம். ரிஷ்லி, ஜே.எம். இஹ்ஸான், சீ. பிரகலாதன் மற்றும் மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் அமில ஜயகொடி ஆகியோர் பங்கேற்றனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சத்திரசிகிச்சையின் மூலம் 3.1 கிலோகிராம் எடையுடைய பாரிய கல் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

