உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

இந்தியா குறித்த நேர்மறையான பார்வையில் இலங்கை முதலிடம் – பியூ ஆய்வு.!!!

இந்தியா தொடர்பில் நேர்மறையான பார்வையைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மையத்தின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் 36 நாடுகளைச் சேர்ந்த 42,000க்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆண்டு பெப்ரவரி முதல் மே மாதம் வரை நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஆய்வில் பங்கேற்றவர்களில் உலகளவில் சராசரியாக 45 சதவீதமானோர் இந்தியா குறித்து சாதகமான கருத்தையும், 41 சதவீதமானோர் எதிர்மறையான கருத்தையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்தியா தொடர்பில் 79 சதவீதமானோர் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதேவேளை, 11 சதவீதமானோர் மட்டுமே எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும், 63 சதவீதமான இலங்கையர்கள் இந்தியாவை தங்களின் முக்கியமான நட்பு நாடாக அடையாளப்படுத்தியுள்ளனர். கடந்த 2024ஆம் ஆண்டில் இலங்கையில் இந்தியா தொடர்பான சாதகமான பார்வை 65 சதவீதமாக காணப்பட்ட நிலையில், தற்போது அது மேலும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தானில் 91 சதவீதமானோர் இந்தியா குறித்து எதிர்மறையான பார்வையைக் கொண்டுள்ளதாகவும், 7 சதவீதமானோர் மட்டுமே சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, துருக்கி, மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளிலும் இந்தியா தொடர்பான சாதகமான பார்வை குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1065686

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time