உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

September 19, 2026

Hot News

IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!
IMG-20260906-WA0028
சீருடை மாறுகிறது; காவல்துறையும் மாறுமா?

Share :

ஊழல் குற்றச்சாட்டு விசாரணை; தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கைது.!!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா, கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளை இயக்குவதற்காக 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேணுக பெரேரா தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக பதவி வகித்த காலப்பகுதியில், குறித்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட விதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்டுள்ள ரேணுக பெரேரா, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான இறுதி தீர்மானம் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னரே அமையும்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1166796

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time