உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

September 19, 2026

Hot News

IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!
IMG-20260906-WA0028
சீருடை மாறுகிறது; காவல்துறையும் மாறுமா?

Share :

இலங்கை சுங்க வருவாய் ரூ.2 டிரில்லியனை கடந்தது; 2026 இலக்கில் 90%க்கும் அதிகம் வசூல்.!!!

இலங்கை சுங்கத் திணைக்களம் 2026ஆம் ஆண்டுக்கான வருவாய் சேகரிப்பில் ரூ.2 டிரில்லியன் என்ற முக்கிய மைல்கல்லை செப்டெம்பர் 15ஆம் திகதி கடந்துள்ளது.

ஜனவரி 1ஆம் திகதி முதல் செப்டெம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுங்கத் திணைக்களம் ரூ.2 டிரில்லியன் வருவாயை திரட்டியுள்ளதாக சுங்கப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 2026ஆம் ஆண்டுக்கான ரூ.2.207 டிரில்லியன் வருடாந்த வருவாய் இலக்கில் 90 வீதத்துக்கும் அதிகமான தொகை ஏற்கனவே வசூலிக்கப்பட்டுள்ளது.

முழு ஆண்டுக்கான வருவாய் இலக்கை எட்டுவதற்கு இன்னும் சுமார் ரூ.207 பில்லியன் மட்டுமே தேவைப்படுவதால், ஆண்டு நிறைவடைவதற்கு முன்னரே இலக்கை அடைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் இறுதியில் ரூ.1.85 டிரில்லியன்

அதிகாரப்பூர்வ சுங்கத் தரவுகளின்படி, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மட்டும் ரூ.1.85 டிரில்லியன் வருவாய் வசூலிக்கப்பட்டிருந்தது.

இத்தொகை முதல் எட்டு மாதங்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கையும் ஏற்கனவே கடந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2025ஆம் ஆண்டு இலங்கை சுங்கத் திணைக்களம் ரூ.2.56 டிரில்லியன் வருவாயை ஈட்டியிருந்தது. அந்தத் தொகை 2025ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருவாய் இலக்கையும் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1166795

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time