போக்குவரத்து விதிமீறல்களுக்கு சாரதிகளின் புள்ளிகள் குறைப்பு முறை ஒக்டோபரில் ஆரம்பம்.!!!
• ஆறு மாத நியமனத் திட்டம்; 2027 மார்ச் 31 வரை நடைமுறை.
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளின் புள்ளிகளைக் குறைக்கும் முறைக்கான ஆறு மாத நியமனத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சில் இன்று (28) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சாரதிகளின் புள்ளிகளைக் குறைக்கும் இந்த நியமனத் திட்டம் 2027 மார்ச் 31ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைத்து, வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் சாரதிகளுக்கான புள்ளிகள் குறைப்பு முறை (Demerit Points System) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த முறை நடைமுறைக்கு வருவதன் மூலம், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளின் சாரதி நடத்தையை கண்காணிப்பதற்கும், வீதி விதிகளைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.