உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260921-WA0076
“மாற்றம்” என்ற மக்கள் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்; சாதனைகள், சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள் என்ன?!!!
IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!

Share :

வரவு–செலவுத் திட்டத்தில் புத்தகங்களுக்கான VAT வரியில் மாற்றம் – பிரதமர் தகவல்.!!!

எதிர்வரும் வரவு–செலவுத் திட்டத்தில் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் 27ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 நேற்று (25) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இம்முறை வரவு–செலவுத் திட்டத்தில் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள VAT வரியில் விசேட மாற்றமொன்றை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக ஜனாதிபதி தமக்கு விசேடமாக அறிவித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

புத்தகங்களின் பெறுமதியையும், வாசிப்பு கலாசாரத்தின் முக்கியத்துவத்தையும் அரசாங்கம் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், புத்தகங்கள் தொடர்பான வரி மாற்றம் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் எனவும் தெரிவித்தார்.

மேலும், கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி வருடாந்தம் நடைபெறும் ஒரு சாதாரண கண்காட்சி மாத்திரமல்ல எனக் குறிப்பிட்ட பிரதமர், இது இலட்சக்கணக்கான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாட்டின் கலாசார வாழ்வியலின் முக்கிய அங்கமாகும் எனத் தெரிவித்தார்.

1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டின் வாசிப்பு கலாசாரத்தை வளர்ப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘தரு திரிய’ புலமைப்பரிசில் நிதியத்தின் கீழ் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1185254

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time