‘ஈராண்டு ஆட்சி – நாட்டுக்கு மாட்சி’; கம்பஹாவில் திரண்ட ஆயிரக்கணக்கானோர்.!!!
இலங்கை அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ‘நமது அரசாங்கம் – ஈராண்டு ஆட்சி – நாட்டுக்கு மாட்சி’ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் பேரணித் தொடரின் கம்பஹா மாவட்ட பேரணி நேற்று (27) நடைபெற்றது.
கம்பஹா நகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். பேரணி ஆரம்பமாவதற்கு முன்னரே பெருமளவான மக்கள் மைதானத்தில் திரண்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகால ஆட்சிப் பயணம், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான கருத்துக்களை மக்களிடம் முன்வைக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் இந்தப் பேரணித் தொடர் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கம்பஹா பேரணி செப்டம்பர் 27ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கம்பஹாவில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகளை வெளியிட்டார்.

