உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ரவூப் ஹக்கீம் வழிகாட்டலில் “டெங்கற்ற கிழக்கு”; அட்டாளைச்சேனையில் விசேட ஆலோசனை.!!!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் சட்ட முதுமானி அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் முன்னெடுப்பில் கிழக்கு மாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் “டெங்கற்ற கிழக்கு” வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள டெங்கு ஒழிப்பு மற்றும் மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல். அலாவுதீன், பிரதேச சபை செயலாளர் ஆர்.எம். நழீல், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜெளபர், செயற்றிட்ட முகாமையாளர் எம்.ஐ. ஸாஹிர், பிரதேச சபை உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள், ஜம்மிய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள், அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளன உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் அமைப்புகள், சமூக இயக்கங்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு நடவடிக்கைகள், மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இளைஞர்களின் தன்னார்வ பங்களிப்புகள், உள்ளூராட்சி மன்றங்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மற்றும் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், எதிர்வரும் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேசத்தை இரண்டு வலயங்களாகப் பிரித்து சிரமதானப் பணிகளை திறம்பட முன்னெடுப்பதற்கும், அதனைத் தொடர்ந்து அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் பிரதான வீதியிலிருந்து ஆரம்பமாகும் விழிப்புணர்வு ஊர்வலத்தை அல் இபாதா கலாசார மன்றம் வளாகத்தில் நிறைவு செய்வதற்குமான ஏற்பாடுகள் தொடர்பாகவும் விரிவான கலந்தாலோசனைகள் இடம்பெற்றன.

இந்நடவடிக்கைகள் மூலம் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதோடு, பொதுமக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1074213

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time