நேற்று முதல் காணாமல்போன வைத்தியர்; இன்று சடலமாக மீட்பு.!!!
பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த 49 வயதான மயக்கவியல் வைத்தியர் ஒருவரின் சடலம் இன்று (24) காலை மஹியங்கனை – மாபாகட, 17ஆம் கட்டைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான முறையில் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, குறித்த காருக்கு அருகிலுள்ள புதர் பகுதியில் வைத்தியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலத்திற்கு அருகிலிருந்து சில மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைத்தியர் நேற்று (23) முதல் காணாமல்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
