உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி –இறுதிவரை போராடிய காத்தான்குடி பதுரியா அணிக்கு இரண்டாமிடம்.!!!
முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக் கழகம் நடத்திய மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று (23) மாலை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் ஈஸ்வரா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 2 கோல்கள் அடித்து வெற்றியைப் பதிவு செய்து சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
இறுதிப் போட்டி வரை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய காத்தான்குடி பதுரியா அணி, போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
இரு அணிகளும் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி, மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு விறுவிறுப்பான கால்பந்து விருந்தை அளித்தன.
இரண்டாம் இடத்தைப் பெற்ற காத்தான்குடி பதுரியா அணியினருக்கு விளையாட்டு ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.


