காத்தான்குடியிலிருந்து முதல் ஹஜ் யாத்திரிகர்கள் குழு மக்கா நோக்கி புறப்பட்டது.!!!
-எம் எஸ் எம் நூர்தீன்-
காத்தான்குடியிலிருந்து இவ் ஆண்டுக்கான முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் இன்று (30) வியாழக்கிழமை மக்கா செல்வதற்காக புறப் பட்டுச் சென்றனர்.
காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஊடாக இந்த முதல் குழுவில் காத்தான்குடியிலிருந்து 60 பேர் செல்கின்றனர்.
இந்த முதல் ஹஜ் யாத்திரிகர் குழுவை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு காத்தான்குடி முகைத்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடை பெற்றது.
இதன் போது விஷேட உரையையும் துஆப் பிராத்தனையையும் காத்தான்குடி ஜாமியத்துல் சித்தீக்கியா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் அப்துல் கபூர் மதனி நடாத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மெளலவி ஹாரூன் ரஷாதி, மெளலவி அமீன் ஹசரத் சம்மேளன செயலாளர் மெளலவி ரமீஸ் ஜமாலி, மெளலவி ஷாஜஹான் பலாஹி உட்பட சம்மேளன பிரமுகர்கள் உலமாக்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஹஜ் பயணம் செய்யும் ஹாஜிமாருடன் அவர்களது உறவினர்கள் வழியனுப்ப வருகை தந்தவர்கள் ஒருவர்யொருவர் ஸலாம் கூறி ஹாஜிமாரை வழியனுப்பி வைத்தனர்
மே மாதம் இறுதி வரை இவ் வருட ஹஜ் கடமைக்காக தொடர்ச்சியாக ஹாஜிகள் பயணிக்கவுள்ளனர்.















