உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஐந்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பாரிய விபத்து – இருவர் காயம்.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் நாகவில்லு எனும் இடத்தில் வியாழக்கிழமை (23) காலை ஐந்து வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியை பின்னால் வந்த தண்ணீர் பவுசர் வண்டி முந்திச்செல்ல முற்பட்டதில் குறித்த விபத்து நாகவில்லு வைட் ஹோல் அருகில் இடம்பெற்றுள்ளது.

புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியை பின்னால் வந்த தண்ணீர் பவுசர் வண்டி முந்திச்செல்ல முற்பட்டபோது, கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியுடன் மோதுவதை தவிர்க்கும் வகையில் செயற்பட்ட தண்ணீர் பவுசர் வண்டி, முன்னாள் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதியதில், முச்சக்கரவண்டி கடும் சேதத்திற்குள்ளாகியது.

அதே சமயம், குறித்த தனியார் பஸ் வண்டி விபத்து இடம்பெற்ற குறித்த இடத்தில் வீதியின் ஓரமாக நின்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலுடனும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

மேலும் குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் வீதியின் ஓரமாக நின்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலில் இருந்த நபர் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டி, தண்ணீர் பவுசர் வண்டி, தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகிய வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1065362

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time